சாராய வேட்டைக்கு சென்ற போலீஸ் வீடுபுகுந்து நகை, பணம் கொள்ளை... மடக்கி பிடித்த பொதுமக்கள்

வேலூர் காவல்துறை சோதனை

வேலூரில் காவல்துறையினர் வீடு புகுந்து 8.5 லட்ச ரூபாய் பணத்தை திருடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share this:
வேலூர் சாராயம் காய்ச்சுவது தொடர்பாக ரெய்டு சென்ற காவல்துறையினர் இரண்டு வீடுகளில் நுழைந்து உள்ளே பீரோக்களை உடைத்து 8.5 லட்சம் ரூபாய் மற்றும் 15 சவரன் நகைகள் எடுத்துச் சென்றனர். அவர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குரு மலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவல் அடிப்படையில் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 4 போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு சாராயம் இருப்பதாக கூறப்பட்ட இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு சென்ற சென்றபோது அங்கு அவர்கள் இல்லை. அவர்கள் வீட்டில் உள்ளே நுழைந்த காவல்துறையினர் பீரோவை உடைத்து அதிலிருந்த 8.5 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு மலையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.

பணம் எடுக்கப்பட்ட பீரோல்


காவல்துறையினர் பணத்தை எடுத்துச் சென்ற தகவலறிந்த  அப்பகுதி கிராம மக்கள் காவல்துறையினரை மடக்கி அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் பணம் வைத்திருந்த பையிலிருந்து பணத்தை அவர்கள் மூலமாகவே எடுத்துக் கொடுக்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அரியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வீடு புகுந்து பணத்தை எடுத்து வந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை உதவி கண்காணிப்பாளர், காவல்துறையினர் மற்றும் மலை கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மலைப்பகுதியில் சாராய ரெய்டுக்கு வரும் காவல்துறையினர் தொடர்ந்து இதுபோன்ற பணங்களை வீட்டிலிருந்து எடுத்துச் செல்வது தொடர்கதையாக உள்ளதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தனர். காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலர்கள் இளையராஜா மற்றும் யுவராஜ் ஆகிய 3 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

செய்தியாளர்: செல்வம்
Published by:Karthick S
First published: