Home /News /tamil-nadu /

அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் - நோயாளிகள் கடும் அவதி

அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் - நோயாளிகள் கடும் அவதி

மருத்துவக் கழிவுகள்

மருத்துவக் கழிவுகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு  மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்றது. குடியாத்தம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
குடியாத்தம் அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு அருகே கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு  மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்றது. குடியாத்தம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு புற மற்றும் உள் நோயாளிகளாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இதனிடையே மருத்துவமனையிலிருந்து எடுக்கப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள்  உணவுகள் உள்ளிட்டவை மருத்துவம் வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவு அருகிலேயே கொட்டியுள்ளனர்.

மேலும் நோயாளிகள் வந்து செல்லும் பாதையின் குறுக்கே மலைபோல் மருத்துவ கழிவுகளும் குப்பைகளும் கொட்டி உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவமனை வந்துசெல்லும் நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Also read...இரவோடு இரவாக ரகசியமாய் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் - கண்டு கொள்ளாத அதிகாரிகள்

மேலும் மருத்துவமனையில் கொட்டப்படும் குப்பைகளை தினமும் அகற்ற நகராட்சி பணியாளர்கள் நடவடிக்கை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

-செய்தியாளர்: கோபிநாத்
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Medical Waste

அடுத்த செய்தி