வேலூரில் நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: 3-வது மரணம்- தொடரும் சோகம்

மாதிரி படம்

நீட் தேர்வு அச்சத்தில் மேலும் ஒரு மாணவி வேலூர் மாவட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

  • Share this:
    தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில், தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டும் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துவரும் துயர சம்பவம் நடைபெற்றுவருவது வேதனையளிக்கிறது.

    இந்தநிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்துள்ளார். இதுவரை 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், 3வது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இந்நிலையில், 3-வது முறையாக நீட் தேர்வு எழுத தனுஷ் தீவிரமாக தயாராகி வந்துள்ளார். இந்தநிலையில், நீட் தேர்வுக்கு முந்தைய நாள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அதேபோல, அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மருத்துவ கனவோடு இருந்த மாணவி கனிமொழி நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளார்.

    இந்நிலையில் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்துள்ளார். அவரும் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தநிலையில், வேலூர் மாவட்டம் நீட் தேர்வு தோல்வி பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் செளந்தர்யா என்ற மாணவி தோட்டபாளையம் பள்ளியில் படித்த மாணவி 510 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்த நிலையில் இவர் கிங்ஸ்டன் பொறியல் கல்லூரியில் நீட் தேர்வு எழுதி இருந்தார். நீட் தேர்வில் தான் தோல்வியடைந்து விடுவோம் என்று பெற்றோரிடம் கூறி அழுத வண்ணம் இருந்த அவர் இன்று புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Karthick S
    First published: