சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து பள்ளிகொண்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து பள்ளிகொண்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
காரில் குட்கா கடத்தி வந்த இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரும் மெகாராம் (வயது 24) மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஷமீர்கான் (வயது 31) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் வெளி மாநிலத்தில் இருந்து போதை பொருட்களை சென்னைக்கு காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் கார் மற்றும் குட்கா பறிமுதல் செய்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கார் மற்றும் மினிவேன் மூலம் துர்கா கடத்தி வருவது தொடர் கதையாகவே உள்ளது.
-செய்தியாளர்- கோபி.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.