Home /News /tamil-nadu /

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினிக்கு 4வது முறையாக பரோல் நீட்டிப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினிக்கு 4வது முறையாக பரோல் நீட்டிப்பு!

நளினி

நளினி

வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக 26 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் நளினி , தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை கவனித்துக்கொள்ள விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார்.

  • News18
  • Last Updated :
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினிக்கு 4வது முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக 26 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் நளினி , தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை கவனித்துக்கொள்ள விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார்.இதன்படி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து 3 முறை தலா ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள நளினி, தினமும் காட்பாடி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

    Also read... "கார்பரேட் நிறுவனம் போல செயல்படுகிறதா மதுரை காமராசர் பல்கலைக்கழகம்?"- ஊழியர்கள் அமைப்பு குற்றச்சாட்டு

    இந்நிலையில் இன்றுடன் அவருக்கு விடுப்பு முடியும் நிலையில், 4வது முறையாக மே மாதம் 25ம் தேதி வரை பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    -செய்தியாளர்: செல்வம்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Nalini

    அடுத்த செய்தி