வேலூரில் ஆதரவற்றோருக்கு தினசரி உணவுகள் வழங்கும் அன்னை தெரேசா மனிதநேய அறக்கட்டளை!

அன்னை தெரேசா அறக்கட்டளை

மேலும்,  கொரோனாவால் உயிரிழக்கும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

 • Share this:
  சாலையோரங்களில் உள்ள ஆதரவற்ற ஏழை எளியமக்களுக்கு தினந்தோறும் அன்னை தெரேசா மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

  கொரோனா ஊரடங்கு கடந்த 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆதரவற்றோர் பலர் தெருக்களையே வீடுகளாக கொண்டு வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் உள்ளது.

  அதே போல் அன்றாட கூலித்தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்துள்ளதால், உணவுக்காக சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தவித்து வரும் மக்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

  இந்த நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடியில் அன்னை தெரேசா மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் டாக்டர் விஜயாபானு தலைமையில் கொரோனா காலம் என்பதால் தினந்தோறும் காலை மற்றும் மதியம் இரண்டு வேளைகளில் இரண்டு ஆட்டோக்கள் மூலம் சாலையோரம் உள்ள ஆதரவற்ற ஏழை எளிய மக்கள் கூலித்தொழிலாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

  கடந்த 3ம் தேதி முதல் தொடர்ந்து தினந்தோறும் 200 பேருக்கு உணவுகள் இந்த அறக்கட்டளையின் மூலம் வழங்கப்படுகிறது. வழக்கம்போல் இன்றும், காட்பாடி ரயில்நிலையம், ஓடைபிள்ளையார் கோவில், காட்பாடி தேவலாயம் அருகிலும் மற்றும் வள்ளிமலை சாலை ஆகிய பகுதிகளில் 2 ஆட்டோக்கள் மூலம் உணவு கொண்டு செல்லப்பட்டு 200 பேருக்கு வழங்கப்பட்டது.

  மேலும் அன்னை தெரேசா அறக்கட்டளையின் சார்பில் கொரோனாவால் உயிரிழக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது

  செய்தியாளர்  - செல்வம்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: