Home /News /tamil-nadu /

காதல் விவகாரத்தில் சிறுவன் அடித்துக்கொலை - சிறுமியின் தந்தை உறவினர்கள் கைது

காதல் விவகாரத்தில் சிறுவன் அடித்துக்கொலை - சிறுமியின் தந்தை உறவினர்கள் கைது

உயிரிழந்த சிறுவன்

உயிரிழந்த சிறுவன்

வேலூர் அரசு மருத்துவமனையில் 15 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த  சிறுவன்  கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வேலூரில் காதல் விவகாரத்தில், 17 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

    வேலூர் மாவட்டம் சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கோகுல், அதே பகுதியில் 15 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் கடந்த மாதம் 22ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் இருவரையும் சிறுமியின் உறவினர்கள் 24ம் தேதி கண்டுபிடித்துள்ளனர். இருவரையும் சிறுமியின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். சிறுமியின் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் வைத்து சிறுவனை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த சிறுவனை, மாடியில் இருந்து விழுந்தாக கூறி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.  இந்த விவகாரம் சிறுவன் கோகுலின் பெற்றோருக்கு தெரியவர இதுகுறித்து 26ம் தேதி பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் சிறுமியின் தந்தை ராஜகுரு மற்றும் அவரின் உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.



    வேலூர் அரசு மருத்துவமனையில் 15 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த  சிறுவன்  கோகுல் சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பாகாயம் காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

    செய்தியாளர்:  செல்வம் (வேலூர்)

     

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Arrest, Crime | குற்றச் செய்திகள், Death, Love, Vellore

    அடுத்த செய்தி