• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கலைஞர் மீது ஆணையாக.. ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டோம் - திமுக வேட்பாளர்கள் உறுதிமொழி

கலைஞர் மீது ஆணையாக.. ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டோம் - திமுக வேட்பாளர்கள் உறுதிமொழி

திமுக வேட்பாளர்கள் உறுதிமொழி

திமுக வேட்பாளர்கள் உறுதிமொழி

திமுக வேட்பாளர்கள் லஞ்சம் வாங்க மாட்டோம் என்று எம்எல்ஏ நந்தகுமார் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

  • Share this:
    கலைஞர் மீது ஆணையாக இறைவன் மீது ஆணையாக நாங்கள் யாரிடமும் ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டோம் பிரச்சாரத்தில் பொதுமக்கள்  முன்நிலையில் உறுதிமொழி எடுத்த திமுக வேட்பாளர்கள்.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம், காட்பாடி பேரணாம்பட்டு, கே வி குப்பம், உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் பல்வேறு நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் திமுக சார்பாக ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு  சத்யானந்தம்  மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்குப் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கொண்டசமுத்திரம் பகுதிக்கு வந்த வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் பிரச்சார வாகனத்தில் வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரம் செய்தார்.

    அப்போது பொதுமக்களிடையே இலவச வீட்டுமனைப்பட்டா வாங்கவோ முதியோர், விதவை பென்ஷன் வாங்கவோ  மற்ற எதற்கும் பொதுமக்களிடம் ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டோம் என்றும் இது கலைஞர் மீது ஆணையாக இறைவன் மீது ஆணையாக உறுதிமொழி எடுக்கிறோம் என்று வேட்பாளர்கள் எம்எல்ஏ நந்தகுமார் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    செய்தியாளர்: கோபி( குடியாத்தம்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: