• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அமரிந்தர் சிங் - அமித்ஷா சந்திப்பு குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து!

அமரிந்தர் சிங் - அமித்ஷா சந்திப்பு குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து!

KS Alagiri

KS Alagiri

காங்கிரஸ் கொண்டுவந்த நல்ல திட்டங்களை தான் சிறு சிறு மாற்றங்கள் செய்து பாரதிய ஜனதா கொண்டு வந்த திட்டங்களாக அறிவித்தது.

  • Share this:
    சட்டரீதியாக கர்நாடகாவில் அணை கட்ட முடியாது, மீறி கட்டினால் தமிழகம் சும்மா இருக்காது. காங்கிரஸ் கொண்டுவந்த நல்ல திட்டங்களை தான் சிறு மாற்றங்கள் செய்து பாரதிய ஜனதா செயல்படுத்தியது. காங்கிரஸ் என்பது கடல் போன்றது சில மீன்கள் அங்கும் இங்கும் துள்ளும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்..

    வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பேரணாம்பட்டு நகரில் நடைபெற்றது.  அப்போது வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனைகளை வழங்கிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது.

    மேகதாது அணை:

    “கர்நாடகாவில் காவிரி குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. சட்ட ரீதியாக கர்நாடக அரசு அணை கட்ட முடியாது அப்படி மீறி கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்தால் தமிழகம் சும்மா இருக்காது.

    மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை சிறு மாற்றங்கள் செய்து தமிழக அரசு அறிவித்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “காங்கிரஸ் கொண்டுவந்த நல்ல திட்டங்களை தான் சிறு சிறு மாற்றங்கள் செய்து பாரதிய ஜனதா கொண்டு வந்த திட்டங்களாக அறிவித்தது. பாரதிய ஜனதா கொண்டுவந்த புதிய திட்டங்கள் அனைத்தும் மக்கள் விரோத திட்டங்கள் தான். பணம்  மதிப்பிழப்பு நடவடிக்கை, வேளாண் சட்டங்கள் போன்ற மக்கள் விரோத சட்டங்களை தான் பாரதிய ஜனதா புதிதாக கொண்டுவந்துள்ளது என்றார்.

    Also Read:  ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா – அதிர்ச்சியில் பெற்றோர்கள்

    அமரிந்தர் சிங் - அமித்ஷா சந்திப்பு:

    காங்கிரஸிலிருந்து தொடர்ந்து தலைவர்கள் பாரதிய ஜனதா தலைவர்களை சந்தித்து வருவது குறித்து கேட்டதற்கு, “காங்கிரஸ் என்பது கடல் போன்றது இங்கொன்றும் அங்கொன்றுமாக மீன்கள் துள்ளும் அதனால் கடலில் உள்ள மொத்த மீன்களும் துள்ளுவதாக அர்த்தமில்லை என செய்தியாளிடம் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

    கோபி - செய்தியாளர், குடியாத்தம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: