• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கேரளா லாட்டரி சீட்டுகள் வேலூரில் தபால் வழியாக அமோக விற்பனை!!

கேரளா லாட்டரி சீட்டுகள் வேலூரில் தபால் வழியாக அமோக விற்பனை!!

கேரளா லாட்டரி சீட்டுகள் வேலூரில் தபால் வழியாக அமோக விற்பனை!!

கேரளா லாட்டரி சீட்டுகள் வேலூரில் தபால் வழியாக அமோக விற்பனை!!

வேலூர் மாவட்டத்தில் கேரளா லாட்டரி சீட்டுகள் தபால் வழியாக அமோக விற்பனையாகி வருவதை தொடர்ந்து, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
    சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் லாட்டரி விற்பனை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை.

    லாட்டரி சீட்டு, மூணு சீட்டு, மற்றும் காட்டன் சூதாட்டம் ஆகியவற்றால் பல குடும்பங்கள் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளனர். சிலர் இதன் காரணமாக தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.

    தமிழகத்தில் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யக் கூடாது என அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இருந்து பலர் கேரளா லாட்டரி சீட்டு விற்பனை மையங்களுக்கு பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    அவருடைய முழு முகவரியும் அனுப்பி வைக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் கேட்கும் லாட்டரி சீட்டுகளை பேக் செய்து தபால் மூலம் அவருடைய இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தபாலுக்கான செலவையும் லாட்டரி சீட்டு வாங்குபவர்களே ஏற்க வேண்டும் அந்த பணத்தையும் அனுப்பி வைக்கிறார்கள். கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியிலிருந்து லாட்டரி சீட்டுக்கள் வேலூருக்கு வந்த வண்ணம் உள்ளன. இவைகள் தபால் மூலம் வருவதால் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக தபால் மூலம் அனுப்பப்படும் லாட்டரி சீட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் - செல்வம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: