காட்பாடியில் மீண்டும் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்

முகமூடி கொள்ளையர்கள்

கழுத்தில் கத்தியை வைத்த மர்மநபர் நகைகளை கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். 

 • Share this:
  காட்பாடியில் இரவில் ஆசிரியர் வீட்டில் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள். 

  வேலூர் மாவட்டம்,காட்பாடியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியர் மனோகரன். இவர் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள ராமதாஸ் நகரில் வசித்து வருகிறார்.  இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு  வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு மனோகரன் வெளியில் வந்துள்ளார்.

  வீட்டு வாசலில் முகமூடி அணிந்து நின்றிருந்த மர்மநபர் கத்தியை காட்டி மனோகரனை மிரட்டியுள்ளார். வீட்டுக்கு முன்பாக இரண்டு இருசக்கர வாகனத்தில் மேலும் சில நபர்கள் இருந்துள்ளார். இதனையடுத்து மனோகரன் பதற்றமடைந்துள்ளார். அவரது கழுத்தில் கத்தியை வைத்த மர்மநபர் நகைகளை கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மனோகரன்  கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயின் கையில் போட்டிருந்த மோதிரம் போன்றவற்றை கழற்றிக்கொடுத்துள்ளார். மேலும் நகைகள் வேண்டும் என மர்மநபர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டுள்ளனர். மனோகரன் மனைவி மற்றும் குழந்தைகள் சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்ததால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.

  இந்தச்சம்பவம் தொடர்பாக ஆசிரியர் காட்பாடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த  காட்பாடி போலீஸார்  தப்பி சென்ற முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஓராண்டிற்கு பிறகு மீண்டு முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை காட்பாடி பகுதியில் துவங்கியுள்ளது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  செய்தியாளர்: செல்வம் ( வேலூர்)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: