ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடியாத்தம் பகுதியில் சத்தத்துடன் கூடிய நில அதிர்வு : பொதுமக்கள் அச்சம்

குடியாத்தம் பகுதியில் சத்தத்துடன் கூடிய நில அதிர்வு : பொதுமக்கள் அச்சம்

வேலூரில் நில அதிர்வு

வேலூரில் நில அதிர்வு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேர்ணாம்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு ஏற்படது குறித்து,  வருவாய்த்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அங்கே, வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கிராமத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி நில அதிர்வு ஏற்பட்டு பல வீடுகள் விரிசல் விட்டது. இதனால், பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 3ஆம்  தேதி டிடி மோட்டூர் கமலாபுரம் ஆகிய கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி அச்சத்தில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக  டிடி மோட்டூர் கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டு மீண்டும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பேர்ணாம்பட்டு தரைகாடு பகுதியில் பெரிய சத்தத்துடன் நில அதிர்வு ஏற்படுவதால் கிராம மக்கள் வீட்டைவிட்டு தெருக்களில் வந்து தஞ்சமடைந்தன.

தொடர்ந்து குடியாத்தம் பேர்ணாம்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு ஏற்படது குறித்து,  வருவாய்த்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக புவியியல் வல்லுனர்களை வைத்து ஆய்வு செய்தல் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது எந்த ஒரு ரிக்டர் அளவிலும் இந்த நில அதிர்வு பதிவாகவில்லை எனவும் இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் பேர்ணாம்பட்டு வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்:  கோபி, குடியாத்தம்.

First published:

Tags: Earthquake, Vellore