வேலூர் சதுப்பேரி ஏரி நிரம்பிய நிலையில், தண்ணீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளளனர். பலர் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், அதிகாரிகள் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் அருகேயுள்ளது சதுப்பேரி பெரிய ஏரி. பாலாற்றிலிருந்து வெள்ள நீர் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஏரிக்கு திருப்பிவிடப்பட்ட நிலையில், ஏரி முழுமையாக நிரம்பி கடைவாசல் கோடி செல்கிறது. இந்த நீர் செல்லும் கால்வாய்கள் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் சரியாக பராமரிக்கப்படாததால் வெளியேறும் நீரால், கொணவட்டம் பகுதியில் ரோஜா மசூதி பகுதியில் உள்ள ரகீம் சாயிப் தெரு உள்ளிட்ட பல தெருக்கள் மூழ்கியுள்ளன.
இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வர முடியாமல் மாடிகளில் தங்கி தஞ்சமடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி அதிகாரிகளும் இவர்களுக்கு எந்த மீட்பு நடவடிக்கையும் எடுக்காமல் உணவு கூட வழங்காமல் அலைகழித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்களை உடனடியாக மீட்டு திருமண மண்டபங்களிலோ அல்லது பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு, உணவு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டுமென கோருகின்றனர்.
தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வந்த அப்பகுதி மக்கள், 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், அவதியுற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Must Read : School Holiday | கன மழையால் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சதுப்பேரி ஏரி கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - செல்வம், வேலூர். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.