தடுப்பூசி முகாமின் போது கோவில் கருவறை அருகே செருப்பு அணிந்து அமர்ந்த பெண் மருத்துவர் - பொதுமக்கள் வாக்குவாதம்

பெண் மருத்துவர்

அந்த பெண் மருத்துவர், இங்கு செருப்பணிந்து கொண்டு வர வேண்டாம் என போர்டு வைத்து உள்ளார்களா என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.

 • Share this:
  கோவிலின் உள்ளே நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பெண் மருத்துவர் ஒருவர் செருப்பு அணிந்து கொண்டு வந்ததால் பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

  கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தடுப்பூசி மீதான அச்சம் நீங்கிய நிலையில் தற்போது பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்த வருகிறார்கள். இதனால் தடுப்பூசி முகாம்களை மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே நடத்தி வருகிறார்கள்.

  அந்த வகையில், வேலூர் மாவட்டம் பொய்கை பகுதியில் உள்ள முத்தாலம்மன் ஆலயத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

  Also Read:  மளிகைக் கடையில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி திடீர் மரணம்… உடல் முழுதும் நீல நிறமானதால் அதிர்ச்சி!

  .இதில் ரெஜினா என்ற பெண் மருத்துவர் கோவிலின் கருவறை அருகே செருப்பு அணிந்து கொண்டு அமர்ந்து கொண்டிருந்தார்.

  பெண் மருத்துவர்


  இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரிடம் ஏன் கோவிலில் உள்ள செருப்பணிந்து கொண்டு வந்தீர்கள் வெளியே விட்டு விட்டு வந்திருக்கலாம் என கேட்டுள்ளனர்.

  Also Read:  குதிரன் சுரங்கப்பாதை: தென்னிந்தியாவின் நீளமான குகைப்பாலம் எப்படி இருக்கு? - ஒரு நேரடி ரிப்போர்ட்!

  அதற்கு அந்த பெண் மருத்துவர், இங்கு செருப்பணிந்து கொண்டு வர வேண்டாம் என போர்டு வைத்து உள்ளார்களா என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.

  மருத்துவரின் பதிலால் மருத்துவருக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பெண் மருத்துவர் பாதியிலேயே தடுப்பூசி முகாமை விட்டு வெளியேறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பெண் மருத்துவர் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான இந்த வாக்குவாதம் காரணமாக முத்தாலம்மன் ஆலய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  செல்வம், செய்தியாளர் - வேலூர்
  Published by:Arun
  First published: