• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • மருமகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்.. நீதிகேட்கும் இளம்பெண்

மருமகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்.. நீதிகேட்கும் இளம்பெண்

மருமகளுக்கு பாலியல் வன்கொடுமை

மருமகளுக்கு பாலியல் வன்கொடுமை

மாமனார் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மருமகள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  முன்னாள் ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  கண் கலங்கிய படி நீதி கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்த  இளம்பெண்.

  வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொண்ணை பகுதியில் உள்ள ஒட்டநெரி கிராமத்தைச் சேர்ந்த  கணவரால் கைவிடப்பட்டவர் லட்சுமி. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். லட்சுமியின் மூத்த மகள் சோனியாவை  ஆந்திரா மாநிலம் ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஸ்ரீராமுலு என்பவருடைய மகன் சதீஷ்குமாருக்கு பெண் கேட்டு பலமுறை சென்றனர்.ஆனால் பெண் கொடுக்க முன்வரவில்லை.
  இதனால் ராணுவ வீரர் ஸ்ரீராமுலு  என்னுடைய ஒரே மகன் தான் என்னுடைய சொத்துக்கு வாரிசு என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி திருமண ஏற்பாடு செய்தனர்.

  ஆந்திர மாநிலத்தில் உள்ள காணிப்பாக்கம் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மணமகன் சதீஷ்குமார் மனநிலை பாதிப்பு உள்ளவர் என்று அறிந்த  பெண்ணின் தாயார் லட்சுமி, மனநிலை பாதிப்பு குறித்து சதிஷ்குமார் அப்பாவிடம் கேள்வி கேட்டபொழுது,போகப்போக இரண்டு அல்லது மூன்று மாதத்தில் முழுவதும் மாறிவிடுவார் என்று சமாதானம் பேசி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

  Also Read:  காதலியின் நிர்வாணப்படத்தை மணமகனுக்கு அனுப்பிய காதலன் - இன்ஸ்டாகிராம் காதலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

  சில தினங்கள் பிறகு சதீஷ்குமாருடைய அப்பா ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தன்னுடைய மருமகளுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கிய நிலையில் கற்பழித்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்து சோனியா இதை குறித்து கேட்ட பொழுது,
  இதை யாரிடமும் சொல்லாதே உன்னுடைய உறவினர்களிடமும் சொல்லாதே மீறி சொல்லினால் குடும்பத்தை கூண்டோடு அழித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

  தொடர்ந்து பலமுறை மிரட்டி ஆசையை தீர்த்துக் கொண்டார். அதனால் சோனியா கர்ப்பமடைந்து பிரசவத்திற்காக வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது .பின்பு மூன்று மாதங்கள் கழித்து சோனியாவை குழந்தையும் தாக்கி உன்னுடைய வீட்டுக்கு போ எனக்கூறி இரவோடு இரவாக பொன்னை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு முன்னாள் ராணுவ வீரர் சென்றுள்ளார்.

  Also Read:  பள்ளி கழிவறையை தூய்மை செய்யும் தலைமையாசிரியர்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் இதுவரை குழந்தையையும் தாயையும் கூட்டிச் செல்லாமல் இருந்துள்ளனர். இவர்களாகவே  வீட்டுக்கு சென்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த சோனியா அவருடைய தாயார் லட்சுமி பொன்னை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.மேலும் இப்பெண்ணின்நிலையை உணர்ந்து சமூக ஆர்வலர்களும் பெண்கள் அமைப்பினரும் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  செய்தியாளர்  - செல்வம் (வேலூர்)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: