வேலூர் மாவட்டம் அல்லாபுரம் சாலையில்துரைவர்மா என்பவர் சின்ன போட்டோ ஸ்டூடியோவை வைத்துள்ளார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பைக்கை வாங்கி உள்ளார்.
இரவு அதனை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது, அந்த எலக்ட்ரிக் பைக்கில் இருந்த பேட்டரியில் தீ விபத்து ஏற்பட்டு பைக் முழுவதுமாக எரியத் துவங்கியது. இதனால், அருகில் நிற்க வைக்கப்பட்டு இருந்த மற்றொரு பெட்ரோல் இருசக்கர வாகனத்தில் தீ பற்றி வந்த வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமானது.
மேலும், தீ வீட்டிலும் பரவியதில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த துரைவர்மா மற்றும் அவரது மகள் மோகன பிரீத்தி (13) ஆகியோர் இந்த தீயால் அலறியபடி, செய்வதறியாது தவித்தனர்.
அப்போது, அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால், தந்தையும், மகளும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Must Read : பட்டப்பகலில் அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - மர்மநபர்கள் கொலை வெறித் தாக்குதல்
பின்னர், இருவர் உடலும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - செல்வம், வேலூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Fire, Vellore