Home /News /tamil-nadu /

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல்... வேலூரில் பதற்றம்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல்... வேலூரில் பதற்றம்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல்.

வேலூர் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கலின் போது, நாம் தமிழர் கட்சி நிர்வாகியை திமுகவினர் தாக்கியதால் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

    தமிழகம் முழுவதும்  நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த 28ம்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் இன்று மாலையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைய உள்ளது.  வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் குவிந்து உள்ளனர்.

    இதனிடையே வேலூர் மாநகராட்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடன் மாவட்ட துணைத் தலைவர் சங்கரும் வந்திருந்தார். அப்போது, திமுகவினரை மட்டும் அதிக எண்ணிக்கையில் அனுமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன், அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதாக புகார் தெரிவித்த சங்கரை, அங்கிருந்த திமுகவினர் சரமாரியாக தாக்கினர். முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த போலீசார், மோதல் போக்கு ஏற்பட்டதால் அவர்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்பட்டது. நாம் தமிழர் கட்சி நிர்வாகியை திமுகவினர் தாக்கிய சம்பவத்தால், சிறிது நேரம் பதற்றம் நிலவியது.



    மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 15 தினங்களே எஞ்சியுள்ளதால் வேட்புமனு செய்த வேட்பாளர்களும் வேட்புமனு இன்று செய்யவுள்ள வேட்பாளர்களுமாக தீவிரமாக பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Local Body Election Updates | உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகள் உடனுக்குடன் தெரிந்து இங்கே க்ளிக் செய்யவும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, Local Body Election 2022, Naam Tamilar katchi, Vellore

    அடுத்த செய்தி