’
சென்னையில் ஒருநாள்’ திரைப்பட பாணியில், வேலூரில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் கொண்டு செல்லப்பட்டது.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. போலீசாரின் பைலைட் வாகனம் முன்செல்ல போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வேகமாக கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் கூட்டாக ஒத்துழைத்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி மதனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தினகரன் (வயது 21). இவருக்கு கடந்த 29 ஆம் தேதி பேரணாம்பட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகன விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க - திருவிழாவில் ஏற்பட்ட தகராறு: அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து இளைஞர் வெட்டி படுகொலை
இதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து தினகரனின் குடும்பத்தினர் தினகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
இவருடைய சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை சிஎம்சி மருத்துவமனைக்கு தானம் அளிக்கப்பட்டது. இருதயம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது.
இதையும் படிங்க - மருத்துவ மாணவர்களின் மனதில் பிற்போக்குத் தனத்தை திணிப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இதன்படி இருதயம் அப்பல்லோ மருத்துவமனையில் ஆம்புலன்சில் கொண்டுசெல்லப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் இருதயம் எடுத்துச் செல்லவேண்டும் என்பதால் வேலூர் காவல்துறையினர் போக்குவரத்தை நிறுத்தி ஆம்புலன்சு வேகமாக செல்ல வழி ஏற்படுத்தினர்.
முன்னதாக போலீசாரின் பைலட் வாகனம் செல்ல ஆம்புலன்ஸ் பின்தொடர்ந்து சென்றது. பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.