• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண்களை தரக்குறைவாக நடத்தும் பேருந்து நடத்துனர்களை அடியுங்கள் - துரைமுருகன் ஆவேசம்

பெண்களை தரக்குறைவாக நடத்தும் பேருந்து நடத்துனர்களை அடியுங்கள் - துரைமுருகன் ஆவேசம்

duraimurugan

duraimurugan

சில அரசு பேருந்து நடத்துநர்கள் பேருந்து அவன் அப்பன் வீட்டு சொத்து போல் பெண்களை நடத்துகின்றனர் அவ்வாறு பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அவர்களை முறைத்தால் அடியுங்கள்.  

  • Share this:
    திமுக ஆட்சிக்கு வந்து 150 நாட்கள் மட்டுமே ஆகிறது அதனால் நீங்கள் என்ன செய்தீர்கள் என யாரும் கேட்க வேண்டாம்
    பிரவசத்திற்கே 10 மாதங்களாகிறது.  பேருந்து நடத்துநர்கள் பெண்களை தரக்குறைவாக நடத்தினால் முறைத்தால் அடியுங்கள். எனக்கும் தெரிவியுங்கள் நானே அவர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்புவிடுவேன் என்று துரைமுருகன் தெரிவித்தார்.

     

    வேலூர்மாவட்டம், காட்பாடி ஆரிய முத்துமோட்டூரில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும்  திமுகவேட்பாளர்களை ஆதரித்து கூட்டமானது நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்,மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோரும் திரளான திமுகவினரும் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “  பஞ்சாயத்து தேர்தல் என்பது முக்கியமானது. நிதியை பஞ்சாயத்து தலைவர்களிடம் தான் ஒப்படைப்பார்கள் கிராமங்களில் அடிப்படை தேவையை அவர்கள் தான் நிறைவேற்றுவார்கள்
    தெருவிளக்குகள் அமைப்பது போன்றவையெல்லாம் செய்வார்கள்

    ஆனால் நீங்கள் சரியில்லாத தலைவரை தேர்வு செய்தால் அந்த தலைவரானவர் தெருவுக்கு விளக்கு போடும் பணத்தில் மனைவிக்கு கம்மல் போட்டுவிடுவார்.  திமுக அரசு தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கியது.  தற்போது விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகளை கொடுத்துள்ளோம்.

    Also Read: ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா – அதிர்ச்சியில் பெற்றோர்கள்

    திமுக அரசு பொறுப்பேற்று 150 நாட்கள் தான் ஆகிறது அதனால் மக்களாகிய நீங்கள் எங்களை என்ன செய்தீர்கள் என கேட்க கூடாது ஒரு குழந்தையை பெற்றெடுக்கவே 10 மாதங்களாகிறது. நீங்கள் அனைவரும் கொரோனாவிலிருந்து உங்களை பாதுகாத்துகொள்ள தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும்.

    அரசு பேருந்துகளில் நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்தோம் மகளிரும் வரவேற்கின்றனர். ஆனால் சில அரசு பேருந்து நடத்துநர்கள் பேருந்து அவன் அப்பன் வீட்டு சொத்து போல் பெண்களை நடத்துகின்றனர் அவ்வாறு பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அவர்களை முறைத்தால் அடியுங்கள்.  அப்படி செய்யும் நடத்துநர்களை வேலையை விட்டே அகற்றி வீட்டிற்கு அனுப்பிவிடுவேன் என பேசினார் .

    Also Read:   ₹10 கோடி சேமிப்புடன் 35 வயதில் ஓய்வு பெற்ற பெண் – எப்படி சாத்தியமானது? – ரகசியம் அறிந்துகொள்ளுங்கள்..

    இதே போல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவின் திட்டங்களை விளக்கி வாக்குகளை சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    செல்வம் - செய்தியாளர் , வேலூர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: