தெருவில் வீசி செல்லப்பட்ட பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை
தெருவில் வீசி செல்லப்பட்ட பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை
ஆண் குழந்தை மீட்பு
Vellore District: கத்தோலிக்க பேராயர் இல்லத்தின் முன்பு குழந்தையை வீசி சென்றவர்கள் யார் என்பது தெரியவில்லை. இது குறித்து வேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் அண்ணா சாலையில் கிறிஸ்தவ கத்தோலிக்க பேராயர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தின் முன்பு யாரோ ஒருவர், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை போட்டு விட்டு சென்று விட்டனர்.
குழந்தை கதறி அழுத சத்தம் கேட்டு பேராயர் இல்லத்தில் இருந்தவர்கள் பதறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். குழந்தையை மீட்டு முதலுதவி அளித்தனர்.
பின்னர் இது தொடர்பாக தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கத்தோலிக்க பேராயர் இல்லத்தின் முன்பு குழந்தையை வீசி சென்றவர்கள் யார் என்பது தெரியவில்லை. அண்ணாசாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் குழந்தையை கொண்டு வந்தவர்கள் யார் என்பது பதிவாகி இருக்கும். இதனால் போலீசார் இந்த பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
குழந்தையை வீசி சென்றவர்கள் யார் எதற்காக போட்டு விட்டுச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : செல்வம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.