வாக்களிக்கச் சென்ற 80 வயது மூதாட்டி உயிரிழப்பு!

அந்த பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

news18
Updated: April 18, 2019, 1:50 PM IST
வாக்களிக்கச் சென்ற 80 வயது மூதாட்டி உயிரிழப்பு!
80 வயது மூதாட்டி துளசி
news18
Updated: April 18, 2019, 1:50 PM IST
வேலூரில் வாக்களிக்கச் சென்ற 80 வயது மூதாட்டி மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்குச் கொண்டு சென்றபோது,  வழியிலேயே உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை வாலாஜாப்பேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி துளசி என்பவர் அதே பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 251-க்கு வாக்களிக்கச் சென்றுள்ளார். வாக்குச்சாவடி உள்ளே செல்லும் போது மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயெ  துளசி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்குத் தகவலளித்து மூதாட்டியின் உடலை ஒப்படைத்தனர்.

இப்படி 80 வயதிலும் தன் கடமையை ஆற்ற வந்த மூதாட்டி துளசி இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...