முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆற்காட்டில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து - ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

ஆற்காட்டில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து - ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

பிரபல துணிக்கடையில் தீ விபத்து

பிரபல துணிக்கடையில் தீ விபத்து

Arcot Fire Accident | ஆற்காடு பேருந்து நிலையம் அருகே 4 அடுக்கு மாடிகளைக்கொண்ட பிரபல துணிக்கடையில் இரவு 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் வாயிலில் பற்றி எறிந்த தீ சற்று நேரத்தில் கடையின் அனைத்து பகுதிகளிலும் மளமளவென பரவியது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

ஆற்காடு பேருந்து நிலையம் அருகே 4 அடுக்கு மாடிகளைக்கொண்ட பிரபல துணிக்கடையில் இரவு 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் வாயிலில் பற்றி எறிந்த தீ சற்று நேரத்தில் கடையின் அனைத்து பகுதிகளிலும் மளமளவென பரவியது.

இதன் காரணமாக சாலை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 5 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆடைகள் தீயில் கருகின.

Also read... செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்து முதலாளிகளாக மாறிய மக்கள்

சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

top videos

    -செய்தியாளர்: சிவா.

    First published:

    Tags: Arcot, Fire accident