மாப்பிள்ளை பிடிக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை... சோக சம்பவத்தின் பின்னணி

வங்கி ஊழியருக்குப் பெண்ணை பிடித்து விட்டதால் திருமணம் செய்துகொள்ள ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு வயது அதிகம் என்பதால் வேண்டாம் என கல்பனா பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மாப்பிள்ளை பிடிக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை... சோக சம்பவத்தின் பின்னணி
  • Share this:
வேலூர் மாவட்டத்தில், தன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்காததால், கல்லூரி மாணவி பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த புதூர் மேடு பகுதியை சேர்ந்தவர் 21 வயதான கல்பனா. இவர், வேலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கல்பனாவுக்கு கடந்த ஓராண்டாக திருணம் செய்து வைப்பதற்காக வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

கடந்த வாரம் 33 வயதுள்ள அரசு வங்கியில் பணிபுரியும் ஒருவர், கல்பனாவை பெண் பார்க்க வந்துள்ளார். வங்கி ஊழியருக்குப் பெண்ணை பிடித்து விட்டதால் திருமணம் செய்துகொள்ள ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு வயது அதிகம் என்பதால் வேண்டாம் என கல்பனா பெற்றோரிடம் கூறியுள்ளார்.



பெற்றோருக்கும் கல்பனாவுக்கும் இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வங்கி ஊழியரையே திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கல்பனாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

பெற்றோர் சென்று பார்த்தபோது கல்பனா போர்வையால் உடலை மூடிக் கொண்டு தன் கழுத்தை பிளேடால் வெட்டி கொண்டது தெரியவந்தது. ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் மயங்கிய கல்பனாவை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து லத்தேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




 
First published: September 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading