• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேலூர் தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது

வேலூர் தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது

கதிர் ஆனந்த்

கதிர் ஆனந்த்

திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில், அவரின் மனு பரிசீலனை செய்யப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரீசிலனை தேர்தல் அதிகாரி முன்னிலையில் இன்று நடந்தது.

    ஏ.சி சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை செய்த போது, அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணையாமல், இரட்டை இலை சின்னத்தில் எப்படி போட்டியிட முடியும் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

    ஏ.சி சண்முகம் அதிமுக வேட்பாளர் என்பதற்கான கடிதம் அளிக்கப்படாததால், அவரது வேட்புமனுவை நிறுத்தி வைக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

    திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில், அவரின் மனு பரிசீலனை செய்யப்பட்டது.

    அப்போது, பணப்பட்டுவாடா புகாரில் கதிர் ஆனந்தின் மீது புகார் இருப்பதாக கூறி, சுயேட்சை ஒருவர் புகார் கூறினார். இதனை அடுத்து, கதிர் ஆனந்தின் வேட்பு மனு மீதான பரிசீலனையை அதிகாரி நிறுத்தி வைத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: