வேலூர் மக்களவை இடைத்தேர்தல் - திமுக, அதிமுக, நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

பணப்பட்டுவாடா புகாரில் கதிர் ஆனந்தின் மீது புகார் இருப்பதாக கூறி, சுயேட்சை ஒருவர் புகார் கூறினார். இதனை அடுத்து, கதிர் ஆனந்தின் வேட்பு மனு மீதான பரிசீலனையை அதிகாரி நிறுத்தி வைத்தார்.

வேலூர் மக்களவை இடைத்தேர்தல் - திமுக, அதிமுக, நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு
கதிர் ஆனந்த் | தீப லக்‌ஷ்மி | ஏ.சி சண்முகம்
  • News18
  • Last Updated: July 19, 2019, 2:57 PM IST
  • Share this:
வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரீசிலனை தேர்தல் அதிகாரி முன்னிலையில் இன்று நடந்தது.


ஏ.சி சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை செய்த போது, அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணையாமல், இரட்டை இலை சின்னத்தில் எப்படி போட்டியிட முடியும் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

ஏ.சி சண்முகம் அதிமுக வேட்பாளர் என்பதற்கான கடிதம் அளிக்கப்படாததால், அவரது வேட்புமனுவை நிறுத்தி வைக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில், அவரின் மனு பரிசீலனை செய்யப்பட்டது.அப்போது, பணப்பட்டுவாடா புகாரில் கதிர் ஆனந்தின் மீது புகார் இருப்பதாக கூறி, சுயேட்சை ஒருவர் புகார் கூறினார். இதனை அடுத்து, கதிர் ஆனந்தின் வேட்பு மனு மீதான பரிசீலனையை அதிகாரி நிறுத்தி வைத்தார்.

இதனை அடுத்து, இரு தரப்பிலும் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு, தேவையான ஆவணங்கள் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் தீபலட்சுமியின் மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.

First published: July 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்