• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தின் வேட்புமனு நிறுத்தி வைப்பு

வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தின் வேட்புமனு நிறுத்தி வைப்பு

ஏசி சண்முகம்

ஏசி சண்முகம்

திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தின் வேட்புமனுவை இன்று பரிசீலனையின் போது தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்தார்.

    வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரீசிலனை தேர்தல் அதிகாரி முன்னிலையில் இன்று நடந்தது.

    ஏ.சி சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை செய்த போது, அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணையாமல், இரட்டை இலை சின்னத்தில் எப்படி போட்டியிட முடியும் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

    ஏ.சி சண்முகம் அதிமுக வேட்பாளர் என்பதற்கான கடிதம் அளிக்கப்படாததால், அவரது வேட்புமனுவை நிறுத்தி வைக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

    திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: