Home /News /tamil-nadu /

காமன்வெல்த் வலுத்தூக்கும் போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் வேலூர் வீராங்கனை.. உதவிக்கரம் நீட்டுமா அரசு

காமன்வெல்த் வலுத்தூக்கும் போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் வேலூர் வீராங்கனை.. உதவிக்கரம் நீட்டுமா அரசு

வேலூர் வீராங்கனை

வேலூர் வீராங்கனை

கவிதாவுக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன்  ரூ.50,000 தனது விருப்ப நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Vellore, India
    நியூசிலாந்தில் நடைபெற உள்ள  காமன்வெல்த் வலுத்தூக்கும் போட்டியில் பங்கேற்க முடியாமல் வேலூர் வீராங்கனை தவித்து வருகின்றார். 

    வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியை  சேர்ந்தவர் லட்சுமி. இவர் மாநகராட்சியில் தினக்கூலி துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கவிதா (வயது 22). உடற்கல்வி ஆசிரியருக்கு படித்துள்ளார்.  இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பளுதூக்குதல், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தந்தை இல்லாமல் தவித்து வரும் கவிதாவின் ஆசையை நிறைவேற்ற அவருடைய தாயார் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் கவிதாவை சேர்த்துள்ளார்.

    அங்கு ஆர்வத்துடன்  பயிற்சிகள் மேற்கொண்டார் கவிதா.இதன் காரணமாக 2020-ம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் பல்வேறு இடங்களில் மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியிலும் தங்கப்பதக்கங்களை வென்றார்.
    மேலும் வலுத்தூக்கும் போட்டியில் மாநில அளவிலும்,தேசிய அளவிலும் ஏராளமான பதக்கங்களை வாங்கி உள்ளார்.



    குறிப்பாக கடந்த ஆண்டு கோவாவில் நடை பெற்ற தேசிய அளவிலான போட்டியில் 2-ம் இடமும், இந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 2-ம் இட மும் பிடித்து இதுவரை 30 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.

    இந்தநிலையில் வருகிற நவம்பர் மாதம் நியூசிலாந்தில் தொடங்க உள்ள காமன் வெல்த் வலுதூக்கும் சாம்பியன் போட்டியில் 63 கிலோ எடை பிரிவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் வேலூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    ஆனால் நியூசிலாந்து செல்ல ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும்.
    கவிதா ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரால் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தந்தை இல்லாததாலும் தாய்  கூலி வேலை செய்வதாலும் பணம் கட்ட முடியாமல் தவித்து வருகிறார். வெயிட் லிஃப்டிங்கில் காமன்வெல்த்திற்கு தேர்வு செய்யப்பட்டால் முழு செலவையும் அரசே ஏற்கும். வலு தூக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டால் பயிற்சி மற்றும் செலவுகளை அரசு ஏற்பதில்லை. ஏனென்றால் ஒலிம்பிக்கில் உள்ள விளையாட்டுகளுக்கு மட்டும் அரசு செலவை ஏற்கும்.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் கவிதாவும் அவருடைய பயிற்சியாளரும் உதவி கேட்டனர். கவிதாவுக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன்  ரூ.50,000 தனது விருப்ப நிதியில் இருந்து வழங்கினார். கூடுதலாக ரூ.2,50,000 வரை தேவைப்படுவதால் பலரிடம் உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : செல்வம்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Vellore

    அடுத்த செய்தி