• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து!

கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து!

DMK - ADMK

DMK - ADMK

திமுக பிரமுகர் மகாலிங்கத்தின் ஆதரவாளர் கண்ணன் என்பவர் கள்ள ஓட்டு போடுவதற்காக முயன்றபோது அதனை தட்டிக் கேட்ட அதிமுக பிரமுகர் வெங்கடேசன் என்பவருக்கும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    வேலூரில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி கேங்கநல்லூர் கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்-காக போட்டியிடும் அதிமுக கட்சியை சேர்ந்த விநாயகம் என்பவர் போட்டியிடுகின்றார்.  அவரை எதிர்த்து திமுக கட்சியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் போட்டியிடுகின்றார்.

    இதில் திமுக பிரமுகர் மகாலிங்கத்தின் ஆதரவாளர் கண்ணன் என்பவர் கள்ள ஓட்டு போடுவதற்காக முயன்றபோது அதனை தட்டிக் கேட்ட அதிமுக பிரமுகர் வெங்கடேசன் என்பவருக்கும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் திமுகவை சேர்ந்த கண்ணபிரான் என்பவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை  எடுத்து அதிமுகவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை குத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.  உடனடியாக அங்கிருந்தவர்கள், வெங்கடேசனை மீட்டு மேட்டூர் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also read: PBKS | 2015 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடரும் சோகம்.. இப்படியும் ஒரு சா(வே)தனை..

    கத்தியால் குத்திய திமுக பிரமுகர் கண்ணபிரான் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து அணைக்கட்டு போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கத்திக்குத்து சம்பவத்தால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: