வீடியோ எடுத்து மிரட்டல் - தற்கொலைக்கு முயன்ற 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குளிக்கும்போது திட்டமிட்டு வீடியோ எடுத்து மிரட்டியதால், தீக்குளித்த 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீடியோ எடுத்து மிரட்டல் - தற்கொலைக்கு முயன்ற 15 வயது சிறுமி  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கைதானவர்கள்
  • News18
  • Last Updated: June 17, 2020, 7:08 AM IST
  • Share this:
வேலூர் மாவட்டம் பாகாயம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி, சனிக்கிழமை வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்; 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் சிறுமி வாக்குமூலம் பலரையும் அதிரவைத்தது.

அதே கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கணபதி, அவரது நண்பர்கள் 22 வயதான ஆகாஷ், 17 வயதான சிறுவன் ஆகிய 3 பேரும் சிறுமி குளிக்கும் போது மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்.


சிறுமியின் சித்தப்பா செல்போனுக்கு வீடியோவை அனுப்பி, உன்னையும், உனது சித்தப்பாவையும் பழிவாங்கவே இந்த வீடியோவை எடுத்ததாகவும், அதை பார்க்கும்படியும் கூறியுள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ந்து போன மாணவி அந்த வீடியோவை நீக்குமாறு வேண்டியுள்ளார். பல முறை கெஞ்சியும் அந்த வீடியோவை அழிக்க முடியாது என்றும் தாங்கள் கூப்பிடும்போது வந்து செல்ல வேண்டும் எனவும் மூவரும் வற்புறுத்தி உள்ளனர்.

மேலும் அந்த வீடியோவைக் காட்டி தங்கள் பாலியல் இச்சைக்கு இணங்கும்படியும் மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில், வேலூர் கோட்டைக்கு வருமாறு அந்த சிறுமியை அவர்கள் அழைக்க, வரமுடியாது என மறுத்துள்ளார்.பின்னர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை மலைக்காவது வா என்று அழைத்துள்ளனர். அங்கு சென்ற சிறுமி மூவரில் ஒருவரை பிடித்துக்கொண்டதுடன், அவர் கையில் இருந்த செல்போனையும் பறித்துள்ளார்.

அந்த போனில் இருந்த தனது வீடியோ, தனது பாட்டி குளிக்கும் வீடியோ உள்ளிட்ட பல பெண்களின் வீடியோ இருந்ததை பார்த்துள்ளார். இதை அடுத்து அந்த வீடியோக்களை அழித்துக்கொண்டிருந்தபோது, தன்னை தாக்கிவிட்டு அந்த இளைஞரும் செல்போனை பிடிங்கிக்கொண்டு ஓடிவிட்டதாக சிறுமி வாக்குமூலத்தில் கூறினார்.

அதன் பின்னர்தான் வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கணபதி, ஆகாஷ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில், முதலில் அந்த மாணவி நேரில் சென்றபோது பாலியல் தொல்லை செய்ததாக தெரிய வந்தது.

மேலும் சிறுமியின் குளியல் வீடியோவை வாட்ஸ்ஆப் மூலம் தங்கள் நண்பர்களுக்கும் அவர்கள் மூவரும் பகிர்ந்துள்ளனர். இது தெரிந்து சண்டைபோட்ட மாணவி, மன உளைச்சலுக்கு ஆளாகி அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், கணபதி, ஆகாஷ் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பாகாயம் போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

கணபதி, ஆகாஷை சிறையில் அடைத்த போலீசார், 17 வயது சிறுவனை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு தற்போது அழைத்து செல்ல முடியாததால் ஜாமினில் விடுவித்தனர்

இந்த நிலையில், 80 சதவீத தீக்காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Also See:

கொரோனா சிகிச்சையில் புது நம்பிக்கையான டெக்ஸாமெதசோன் - விலை எவ்வளவு? யார் யாருக்கு பலனளிக்கும்? விரிவான தகவல்கள்...

இந்திய படை வீரர்கள் உயிரிழப்பு குறித்த தகவல்களை அரசு இதுவரை தெரிவிக்காதது ஏன்? - ப.சிதம்பரம் கேள்விFirst published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading