Home /News /tamil-nadu /

வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் மாற்றமா? கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் மாற்றமா? கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம்


வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம்

வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம்

வெள்ளலூரில் மத்திய அரசின் ரைட்ஸ் அமைப்பு சாலை விரிவாக்கம் உள்ளிட்டவை பற்றி ஆய்வு செய்து வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்த பிறகே உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் தொடர்பாக தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் விளக்கமளித்துள்ளார்.

    கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில், சூயஸ் குடிநீர் திட்டப் பணியில் ஈடுபடுபவர்கள் சாலைகளில் பள்ளம் தோண்டிவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் புகார் எழுப்பினர். இதனைக்கேட்ட ஆணையர் பிரதாப், சூயஸ் நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    ALSO READ | 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள்.. எங்கே போகிறது தமிழகம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

    இதேபோன்று அதிமுக உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை கைவிடக் கூடாது என்று முழக்கங்களை எழுப்பினர். அதைத்தொடர்ந்து பேசிய ஆணையர், வெள்ளலூரில் மத்திய அரசின் ரைட்ஸ் அமைப்பு சாலை விரிவாக்கம் உள்ளிட்டவை பற்றி ஆய்வு செய்து வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்த பிறகே உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    முன்னதாக, வெள்ளலூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு பதிலாக வேறு பகுதியில் பேருந்து நிலையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Bus, Coimbatore

    அடுத்த செய்தி