வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவிற்கு வாய்ப்பு?

வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவிற்கு வாய்ப்பு?

வாக்குப்பதிவு இயந்திரம்

வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன. அப்போது, 2 மின்னணு இயந்திரங்கள், இரண்டு கட்டுப்பாடு இயந்திரங்கள், ஒரு விவி பேட் ஆகியவை இருசக்கரவாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன. உடனடியாக அங்கு கூடிய மக்கள், இரு சக்கரவாகனத்தில் வந்த தேர்தல் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அனுப்பியுள்ளார். அதில், தேர்தல் பணியாளர்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படாதது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுகள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  விவிபேட் இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படலாம் என தெரிகிறது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: