போக்குவரத்துக் கழகத்தின் சாலையோர உணவகங்களுக்கான ஒப்பந்தப்புள்ளியில் ‘சைவ உணவு’ மட்டும் சமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானதை தொடர்ந்து, அந்த நிபந்தனை விலக்கிக்கொள்ளப்பட்டது.
விரைவு பேருந்துகளில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் போது, சாலையோரம் இருக்கும் உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு அரசுப் பேருந்துகளை உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
அதில் முக்கிய நிபந்தனைகளாக, உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும்.
கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ-கழிவறை இருக்க வேண்டும்.
மேலும், உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் எம்.ஆர்.பி (MRP) விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது.
Must Read : அரசியல் சரிபட்டு வராது... பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை
இந்நிலையில், போக்குவரத்து கழகத்தின் அறிவிப்பில், சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, பல்வேறு தரப்பினரிடமும் அதிருப்தியையும், விமர்சனத்தையும் உருவாக்கியது. இதையடுத்து, சைவ உணவு மட்டும் என்ற வார்த்தையை நீக்கி தற்பொழுது மீண்டும் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் – சாலையோர உணவகங்களில், பயணிகள் உணவு அருந்துவதற்கேற்ப பேருந்து நிறுத்துவது சம்மந்தமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
அப்போது ஒப்பந்தப்புள்ளி நிபந்தனையில் ஒன்றாக “சைவ உணவு” மட்டுமே சாலையோர உணவகங்களில் சமைக்கப்பட வேண்டும், மற்றும் பயணிகளுக்கு பரிமாறப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
Must Read : பள்ளி மாணவனுடன் ரகசிய திருமணம்.. ஆசிரியை போக்சோவில் கைது
இது குறித்து பேருந்து பயணிகளிடமிருந்து மாறுபட்ட கருத்தும், “அசைவ உணவும்“ பரிமாறப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பெறப்பட்டதன் அடிப்படையில் “சைவ உணவு” மட்டுமே சமைக்கப்பட வேண்டும், மற்றும் பரிமாறப்பட வேண்டும் என்ற ஒப்பந்தப்புள்ளி நிபந்தனை விலக்கிக் கொள்ளப்பட்டது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், ஏற்கனவே இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியும் விலக்கிக் கொள்ளப்பட்டது “சைவ உணவு” மட்டும் பரிமாறப்பட வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.