Home /News /tamil-nadu /

திண்டுக்கல்: பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் காய்கறி விலை அதிகரிப்பு

திண்டுக்கல்: பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் காய்கறி விலை அதிகரிப்பு

காய்கறிகள்

காய்கறிகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திண்டுக்கல் மாநகராட்சி, காந்தி காய்கறி மார்க்கெட்டில் சென்ற மாதம் வரை காய்கறிகளின் விலை அதிகமாகவே காணப்பட்டது. பின்பு வரத்துகள் அதிகரித்த காரணத்தால்  காய்கறிகளின் விலை குறைய ஆரம்பித்தது. ஆனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை நோக்கி அதிகரித்து வருவதாலும், டீசல் 87 ரூபாயாக ஏற்றம் அடைந்த காரணத்தினாலும் காய்கறிகளின் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது.

    30 ரூபாய்க்கு விற்பனையான பச்சைப்பட்டாணி 55 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கு விற்பனையான கத்தரிக்காயை 60 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி  40 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனையான உருளைக்கிழங்கு 40  ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்பனையான பீன்ஸ் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

    அதேபோல, 25 ரூபாய்க்கு விற்பனையான உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கும், ஒரு கட்டு 10 ரூபாய்க்கு விற்பனையான கருவேப்பிலை 50 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கு விற்பனையான கொத்தமல்லி 50 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்பனையான முருங்கக்காய் 150 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கு விற்பனையான சௌசௌ 15 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்பனையான அவரைக்காய் ஐம்பது ரூபாய் என விலை உயர்ந்து விர்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு காய்கறிகளின் விலை அதிகரித்திருப்பதால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    மேலும் படிக்க...ரூ.10 கோடி மோசடி செய்த புகார்.. கேஎஃப்ஜே அதிபர் சிக்குவாரா? பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dindigul, Petrol Diesel Price hike, Vegetable price

    அடுத்த செய்தி