வெங்காயத்துடன் பூண்டு, காய்கறி விலைகளும் கிடுகிடு உயர்வு..!

Vegetables Price | சென்னை கோயம்பேட்டில் வெங்காயம் கிலோ 180 ரூபாய்க்கும்-  சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது . பூண்டு கிலோ 200 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

வெங்காயத்துடன் பூண்டு, காய்கறி விலைகளும் கிடுகிடு உயர்வு..!
காய்கறிகள்
  • Share this:
வெங்காய விலை கிலோ இருநூறு ரூபாயை நெருங்கும் நிலையில், பூண்டின் விலையும் 200 ரூபாயை தொட்டுள்ளது. காய்கறிகள் மட்டுமின்றி மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு அடித்தட்டு மக்களை பாதித்துள்ள நிலையில், தற்போது இதர காய்கறிகள் மற்றும் தானிய வகைகளின் விலையும் அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் வெங்காயம் கிலோ 180 ரூபாய்க்கும்-  சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது . பூண்டு கிலோ 200 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல் சிகப்பு மிளகாய் கிலோ 130 ரூபாய்க்கும்,  தக்காளி கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது .


தினந்தோறும் ஏறி வரும் காய்கறி விலையை கட்டுப்படுத்த, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்கறிகள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கடந்த வாரம் கிலோ 230 ரூபாய்க்கு விற்பனை ஆன முருங்கைக்காய் இந்தவாரம் 550 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.  15 ரூபாய்க்கு கடந்த வாரம் விற்பனை ஆன வெண்டைக்காய் இந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் சின்ன வெங்காயமும் 40 ரூபாய் அதிகரித்து 140க்கு விற்பனை ஆனது  பெரிய வெங்காயம் 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது  கேரட், பீன்ஸ் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது .
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்