மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி முடிவு - 9 மாவட்டங்களில் காய்கறிகளின் விலை உயரும் அபாயம்

மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால், 9 மாவட்டங்களில் காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி முடிவு - 9 மாவட்டங்களில் காய்கறிகளின் விலை உயரும் அபாயம்
கோப்புப் படம்
  • Share this:
திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒட்டுமொத்த காய்கறி தேவையையும் மதுரை சென்ட்ரல் மார்க்கெட் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

திருவனந்தபுரத்திற்கும் இங்கிருந்தே காய்கறிகள் கொண்டு செல்லப்படும். தற்போது மகாராஷ்டிராவில் தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டாமென வியாபாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.Also read... இது வழக்கமான லாக்-அப் மரணங்கள் போல் இல்லை.. அமைச்சர் சி.வி சண்முகம்..

இதன் காரணமாக வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை உயரக்கூடும். சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு மகாராஷ்டிராவில் இருந்தே அதிக அளவு காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading