• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தற்காலிக மார்கெட்டில் கடைகள் குறைப்பு - காஞ்சிபுரத்தில் காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்

தற்காலிக மார்கெட்டில் கடைகள் குறைப்பு - காஞ்சிபுரத்தில் காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகள்

காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகள்

இன்று முதல் செயல்பட இருந்த காஞ்சிபுரம் தற்காலிக மார்க்கெட்டில் முறையாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்படாததால் அதிருப்தியடைந்த வியாபாரிகள் வையாவூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share this:
    கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் செயல்பட்டு வந்த ராஜாஜி காய்கறி சந்தை மூடப்பட்டது. அதற்கு பதிலாக காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் தற்காலிகமாக சந்தை அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட காய்கறிச் சந்தையில் மழைநீர் தேங்கி வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகளும், பொதுமக்களும், அவதிப்பட்டதால் வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் பென்னையா உத்தரவிட்டிருந்தார்.

    இதனையடுத்து காஞ்சிபுரம்- வாலாஜாபாத் சாலையில் நசரத்பேட்டை பகுதியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் தற்காலிக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.



    பச்சையப்பாஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடையில் 150 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராஜாஜி மார்க்கெட்டில் 375 கடைகள் இயங்கி வந்தது. தற்பொழுது பச்சைபாஸ் ஆடவர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடையில் வெறும் 100 கடைகளுக்கு மட்டுமே கடை வழங்கப்படும் என நகராட்சி சார்பாக தெரிவித்ததால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள் இன்று முதல் செயல்பட இருந்த புதிய இடத்திற்கு கடைகளை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அத்துடன் வையாவூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் படிக்க...

    புதுக்கோட்டையில் இருதரப்பினரிடையே மோதல் - வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைத்த போலீஸார்

    போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டை திருப்பித் தருவதற்காக பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல ராஜாஜி மார்க்கெட்டை எங்களுக்கு திருப்பி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: