• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ’தேசத்தின் காவலாய் வாழ்ந்த என் தோழா’ - காவலர் வீரவணக்க நாள் கீதம்

’தேசத்தின் காவலாய் வாழ்ந்த என் தோழா’ - காவலர் வீரவணக்க நாள் கீதம்

காவலர் வீரவணக்க நாள் கீதம்

காவலர் வீரவணக்க நாள் கீதம்

’தேசத்தின் காவலாய் வாழ்ந்த என் தோழா’தமிழக காவல்துறையில் இருக்கும் நிஜ ஹீரோக்களுக்கான வெளியிடப்பட்டுள்ள வீரவணக்க நாள் பாட்டு.

  • Share this:
    காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பாடல் ஒன்றை  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வருண்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் (POLICE COMMEMORATION DAY) கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வருண்குமார் ஐபிஎஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ’தேசத்தின் காவலாய் வாழ்ந்த என் தோழா’தமிழக காவல்துறையில் இருக்கும் நிஜ ஹீரோக்களுக்கு இந்த #VeeraVanakkamAnthem சமர்ப்பணம் என அந்த ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.



    கிருஷ்ணகிரியை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தியுடன் பெண் காவலர் சசிகலா இந்தப் பாடலை பாடியுள்ளனர்.இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் ஃபிஃபித் ஆங்கிள் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு தனது நன்றியை வருண்குமார் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: