Home /News /tamil-nadu /

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்

வித்யா ராணி

வித்யா ராணி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வீரப்பன் மகள் வழக்கறிஞர் வித்யா ராணி பாஜகவில் இணைந்துள்ளார்.

    சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் - முத்துலட்சுமி தம்பதிக்கு விஜயலட்சுமி, வித்யாராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் வித்யா ராணி வழக்கறிஞராக உள்ளார். இவர் தற்போது பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

    பின்னர் வித்யா ராணி பேசும் போது, “மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் என் தந்தையின் எண்ணம். தவறான வழியை தேர்வு செய்தாலும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது தந்தையின் எண்ணமாக இருந்தது. மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதால் பாஜகவில் நான் இணைந்திருக்கிறேன்” என்றார்.

    மேலும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினிகாந்த் கடிதம்
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: BJP, Veerappan

    அடுத்த செய்தி