திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்...!

திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்...!
  • News18
  • Last Updated: February 3, 2020, 11:37 AM IST
  • Share this:
சேலம் கிழக்கு மற்றும் மேற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக தேர்தல் பணிக்குழுச் செயலாளராக பொறுப்பு வகித்த டி.எம் செல்வகணபதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.ஆர்.என் ராஜேஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரபாண்டி ராஜா தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்