வீரப்பனின் மகள் வித்யாவுக்கு பாஜகவில் முக்கியப் பொறுப்பு
வீரப்பனின் மூத்த மகள் வித்யா, பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரப்பனின் மகள் வித்யா ராணி
- News18 Tamil
- Last Updated: July 16, 2020, 12:27 PM IST
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குப் பிறகு பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கான பெயர் பட்டியலை, அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் வெளியிட்டார்.
மாநில செயற்குழு உறுப்பினர்களாக ராதாரவி, கஸ்தூரி ராஜா, கங்கை அமரன் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இயக்குநர் பேரரசு மாநில துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வீரப்பனின் மகள் வித்யா வீரப்பனுக்கு மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் படிக்க...
கொரோனா பரவல்: புதுச்சேரி கோயில்களில் ஆடித்திருவிழா ரத்து
சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் - முத்துலட்சுமி தம்பதிக்கு விஜயலட்சுமி, வித்யாராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் வித்யா ராணி வழக்கறிஞராக உள்ளார். இவர் சமீபத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில செயற்குழு உறுப்பினர்களாக ராதாரவி, கஸ்தூரி ராஜா, கங்கை அமரன் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இயக்குநர் பேரரசு மாநில துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வீரப்பனின் மகள் வித்யா வீரப்பனுக்கு மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.