ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

3-வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி...!

3-வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி...!

வீராணம் ஏரி,

வீராணம் ஏரி,

வீராணம் ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் 48,856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்திசெய்கிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி, இந்த ஆண்டு 3 வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே, வீராணம் ஏரி அமைந்துள்ளது. தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி, கடலூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ளது.

  இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் 48,856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்திசெய்கிறது.

  இன்று காலை வீராணம் ஏரியின் முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 5-ம் தேதி, ஏரியின் நீர் மட்டம் 43.75 அடியாக இருந்தது.

  இந்நிலையில் சென்னைக்கு 55 கன அடி நீர் அனுப்பட்ட வந்தன. இதனால் ஏரியின் நீர் வரத்து இல்லாததால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்ப்பட்டது.

  அதனை தொடர்ந்து சென்னைக்கு விடாமல் குடிநீர் அனுப்புவதற்காக மேட்டூர் அனையில் இருந்து கீழணைக்கு நீர் திறக்கப்பட்டு பின்னர் கீழணையில் இருந்து விநாடிக்கு 800 கன அடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது.

  கடந்த 4 நாட்களாக வீராணம் ஏரிக்கு நீர் திறந்துவிடப்பட்டது. இதனை தொடர்ந்து , இன்று காலை வீராணம் ஏரி முழுக் கொள்ளவான 47.50 அடியை எட்டியது.

  இதன்மூலம், இந்த ஆண்டில் 3 வது முறையாக எட்டியுள்ளது. சென்னை மக்களின் குடி நீருக்காக விநாடிக்கு 60 கன அடியும் அனுப்பபட்டு வருகிறது . வீராணம் ஏரி முழுக் கொள்ளவை எட்டியுள்ளதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  Also see...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Cuddalore