முழுகொள்ளளவை எட்டியதால் கடல்போல காட்சியளிக்கும் வீராணம் ஏரி...!

முழுகொள்ளளவை எட்டியதால் கடல்போல காட்சியளிக்கும் வீராணம் ஏரி...!
வீராணம் ஏரி
  • News18
  • Last Updated: December 3, 2019, 10:49 AM IST
  • Share this:
தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போன்று கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டிதீர்த்து வருகிறது.

இதன் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.5 அடியை எட்டிய நிலையில் கடல்போல் காட்சியளிக்கிறது.


இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி விஎன்எஸ் மற்றும் வெள்ளியங்கால் ஒடை வழியாக 2,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், வீராணம் ஏரியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதே போன்று, கெடிலம் ஆறு, தென்பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளும் முழுமையாக நிரம்பியுள்ளன. இதன் காரணமாக, சர்வ ராம்பேட்டை, வீரநத்தம், கண்டமங்கலம் கிராமங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

Also see...
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading