Home /News /tamil-nadu /

அர்ச்சகர்கள் நியமனம் : சரித்திர நாயகருக்கு தாய்க்கழகத்தின் நெஞ்சார்ந்த பாராட்டு - முதலமைச்சருக்கு வீரமணி வாழ்த்து

அர்ச்சகர்கள் நியமனம் : சரித்திர நாயகருக்கு தாய்க்கழகத்தின் நெஞ்சார்ந்த பாராட்டு - முதலமைச்சருக்கு வீரமணி வாழ்த்து

முதலமைச்சருக்கு வீரமணி வாழ்த்து

முதலமைச்சருக்கு வீரமணி வாழ்த்து

Kee. Veeramani : கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசின் விதிகள் செல்லும் என தீர்ப்பு வெளியான நிலையில் முதலைச்சருக்கு கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
    தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசின் விதிகள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு என திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

    இந்த தீர்ப்பு குறித்து தமிழக முதலைச்சருக்கு கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தனது வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது,  “தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங்களும் அதற்குரிய விதிகளும் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு, சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கு தாய்க்கழகத்தின் நெஞ்சார்ந்த பாராட்டு.

    தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமலேயே அரசு மரியாதையுடன் அவருடைய உடலைப் புதைக்கும் நிலை ஏற்பட்டதே என்று ஆதங்கம் தெரிவித்தார் அந்நாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அந்த ஆதங்கத்தைப் போக்கிடும் வகையில், தாம் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021 ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ஆகம  பயிற்சி பெற்று வேலைக்காகக் காத்திருந்த இளைஞர்கள் இருபாலரையும் பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பித்தார்

    ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை சரித்திரத்தைப் படைத்தார். இதன்மூலம் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பதில் ‘திராவிட மாடல்’ ஆட்சி முத்திரையை  பதித்துள்ளது! இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ச்சகர்களும், வைதீக சனாதன அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தனர்.

     

     



     

    அந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று (22.8.2022) காலை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு தந்த தீர்ப்பு - தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் நியமனங்களும், அதற்குரிய விதிகளும் செல்லும் என்று கூறி, எதிர்த்துப் போடப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது.

    ALSO READ  | பிரியாணி விருந்துடன் நடந்த விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம்

     

    பாராட்டி வரவேற்கத்தக்க - குறிப்பிடத்தக்க வரலாறு படைக்கும் வெற்றிக்குக் காரணமான மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்தினையும் - பாராட்டினையும் தாய்க்கழகமான திராவிடர் கழகம் தெரிவித்து மகிழ்கிறது!” என கி.வீரமணி கூறியுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai High court, DMK, K.Veeramani, MK Stalin

    அடுத்த செய்தி