• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.வேதரத்தினம்

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.வேதரத்தினம்

முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதரத்தினம்

முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதரத்தினம்

வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார்.

  • Share this:
1996, 2001, 2006 என தொடர்ந்து மூன்று முறை நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.கே.ராஜரத்தினம் அப்பகுதியில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்தார்.

இந்நிலையில் திமுகவில் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து பாஜகவில் இணைந்தார். பல ஆண்டுகளாக பாஜகவில் மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த எஸ்.கே.வேதரத்தினம் இன்று மீண்டும் காணொலி காட்சி வாயிலாக திமுகவில் இணைந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் சார்பில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.கே.வேதரத்தினம் தமிழகத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களிலேயே 35,000 அதிகமான வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தவர்.

Also read... மக்களின் செல்வாக்கு இருப்பதால் தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும்... அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் மூன்று இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் எஸ்.கே.வேதரத்தினதுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான பாஜகவின் மாநில நிர்வாகிகள் பட்டியல் வேதரத்தினம் பெயர் இல்லாதது அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியதாலேயே தற்போது மீண்டும் தன்னை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: