Home /News /tamil-nadu /

வேதாரண்யம் ஆற்றுப்பாலம் கட்டுவதில் தாமதம்: மாணவர்கள் அவதி

வேதாரண்யம் ஆற்றுப்பாலம் கட்டுவதில் தாமதம்: மாணவர்கள் அவதி

ஆற்றுப்பாலம் கட்டுவதில் தாமதம் - மாணவர்கள் அவதி

ஆற்றுப்பாலம் கட்டுவதில் தாமதம் - மாணவர்கள் அவதி

வேதாரணயம் அருகே ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது சுமார் 20 கிலோமீட்டருக்கு மேல் சுற்றிக்கொண்டுதான் மற்ற பகுதிகளுக்கு இந்த கிராம மக்கள் செல்ல வேண்டும். எனவே அங்கு நடைபெறும் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆற்றுப்பாலம் கட்டும் பணிகள் மிக மந்தமாக நடைபெறுவதால் மாணவ மாணவிகளும், பொதுமக்களும் ஆற்றில் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யம் அருகே தலைஞாயிறு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வண்டல், குண்டூரான்வெளி மற்றும் அவரிக்காடு ஆகிய கிராமங்கள் உள்ளன. அவரிக்காடு வண்டல் கிராமங்களுக்கிடையே நல்லாறு அடப்பாறு என 2 ஆறுகள் ஓடுகிறது. இந்த ஆறுகளை கடந்து தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மேலும் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது சுமார் 20 கிலோமீட்டருக்கு மேல் சுற்றிக்கொண்டுதான் மற்ற பகுதிகளுக்கு இந்த கிராம மக்கள் செல்ல வேண்டும்.

    இந்நிலையில் இந்த இரண்டு கிராமங்களையும் இணைக்கும் விதமாக கடந்த 2010-ம் ஆண்டு சுமார் 14.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் கூடுதலாக 5 கோடி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பாலம் கட்டும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறும் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் பள்ளி மாணவிகளும், பொதுமக்களும் தண்ணீரில் நனைந்தபடி ஆற்றுக்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் கடடுமானப்பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் ஓரத்தில் ஆற்றுக்குள் கிடக்கும் இரும்பு கம்பிகள் குத்தி மாணவர்களுக்கு காயம் ஏற்படுவதும் அவ்வப்போது நிகழ்வதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ALSO READ...

    நாகை: ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை போராடி மீட்பு
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Nagapattinam, River bridge construction, School students, Student life at risk, Vedaranyam

    அடுத்த செய்தி