Home /News /tamil-nadu /

Sterlite Plant | ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டம்...

Sterlite Plant | ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டம்...

Sterlite Plant | ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டம்...

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா 2ம் அலையின்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக தருவதாக உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கூறியது. அதற்கு தமிழ்நாடு அரசும் இசைவு தெரிவித்ததால், மே 13ம் தேதி முதல் உற்பத்தி தொடங்கியது. இதனிடையே, கொரோனா மூன்றாவது அலையை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 6 மாதம் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க கோரி, வேதாந்தா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், ஆலை தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

    மேலும் படிக்க... Petrol Diesel Price | பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

    அதன்பேரில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் நிறுவனம் நிறுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இதுவரை 2132 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், 134 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு



    மேலும், ஆகஸ்ட் 6ஆம் தேதி நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதியளித்தால் உடனடியாக உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜன் ஆலையை பராமரிப்பு  செய்ய இரண்டு மெகாவாட் மின்சாரம் தேவை என்றும் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Oxygen, Sterlite plant, Supreme court, Thoothukudi

    அடுத்த செய்தி