சென்னை உயர்நீதிமன்றத்தை அவமதித்ததா வேதாந்தா நிறுவனம்? உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

ஸ்டெர்லைட் ஆலை

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த வேதாந்த தனது மனுவில் கவனக் குறைவாக சென்னை உயர்நீதிமன்றத்தை விமர்சித்த பத்தியை நீக்குமாறு புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதாகக் கூறி 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூடியது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி தள்ளுபடி செய்து ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் ஒரு குறிப்பிட்ட பத்தியில் "வேதாந்தா நிறுவனத்தின் வாதங்களை நிராகரித்ததன் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் சில எதிர் மனுதாரர்களுக்கு ஆதரவான  முன்னமே தீர்மானிக்கப்பட்ட ஒரு நிலையை வெளிக்காட்டியது. இவ்வாறு முன்னமே தீர்மானிக்கப்பட்ட ஒரு முடிவை வெளிக்காட்டியது மூலம் ஒரு நியாயமான  தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்க இயலாமல் போனது".Also read... Chennai Power Cut | சென்னையில் இன்று (09-09-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை - எங்கெங்கே..?

பொதுவாக ஒரு தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யும்போது தன் தரப்பு வாதங்களில் உள்ள உண்மைத் தன்மையை  முழுவதுமாக நீதிமன்றம் ஆராயவில்லை என்று கூறிதான் மேல்முறையீடு செய்வார்கள்.

அப்படியில்லாமல் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் உள்நோக்கத்தோடு செயல்பட்டதாக மேல்முறையீடு செய்வது நீதிமன்ற அவமதிப்பாகும். இதனைத் தவிர்க்க வேதாந்தா நிறுவனம் இக்குறிப்பிட்ட பத்தியை தங்களது மனுவில் இருந்து நீக்குமாறு கூறியுள்ளது.

இந்த பத்தி கவனக் குறைவால் இறுதி மனுவில் இடம்பெற்று விட்டதாகவும் சென்னை உயத்நீதிமன்றத்தௌ அவமதிக்கும் நோக்கத்தில் இடம்பெற்றதில்லை என்று வேதாந்தா நிறுவனம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: