முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Thoothukudi Sterlite : 1,000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி - வேதாந்தா விளக்கம்

Thoothukudi Sterlite : 1,000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி - வேதாந்தா விளக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் முழுத்திறனுக்கு 1,000 டன் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு சிறிது அவகாசம் கொடுத்தது நீதிமன்றம்.

ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தமிழகத்தில் குரல்கள் வலுத்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் ஆலையை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தமிழக அரசிடம் கூறினார். ஆட்சியர் அறிக்கையை காரணம் காட்டி ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு எடுத்து நடத்த தயாரா? தமிழக அரசே எடுத்து நடத்தலாம் என யோசனை தெரிவித்தார். மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என அரசு சொல்வதா என நீதிமன்றம் என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து, தற்காலிகமாக நான்கு மாதங்களுக்கு மட்டும் இயக்கி கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 35 டன் மட்டுமே  மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில் 1,000 டன் உற்பத்தி செய்யமுடியும் என வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் 1,000 டன் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இதுதொடர்பாக வல்லுநர்களிடம் பேசி வருகிறோம். இங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழ்நாட்டில் தேவை உள்ள இடங்களுக்கு எடுத்துச்செல்வது குறித்தும். இந்தியாவில் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamilnadu, Thoothukudi Sterlite, Vedanta