முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவு எடுத்த வேதாந்தா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவு எடுத்த வேதாந்தா

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தூத்துக்குடியில், அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆலையை உடனே மூட வலியுறுத்தி 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அதே ஆண்டு மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காகக் கடந்தாண்டு மூன்று மாதங்கள் மட்டும் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்கப்போவதாக வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் செய்துள்ளது. அதில், தாமிர உருக்கு வளாகம், தாமிர சுத்திகரிப்பு ஆலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை உள்ளிட்ட ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள 10 பிரிவுகளும் விற்பனைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு : ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

ஆக்சிஸ் கேபிடல் நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை வரும் 4-ம் தேதி மாலை 6 மணிக்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்டெர்லைட் ஆலை உலகத் தரம் வாய்ந்த மற்றும் கழிவுகளை வெளியேற்றாத தொழிற்சாலை என்றும் இந்த ஆலையில் இந்தியாவின் காப்பர் தேவையில் சுமார் 40 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Thoothukudi Sterlite