• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ”விதிமீறல்களை நிரூபிக்காமல் தண்டிக்க கூடாது” - ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா தீவிர வாதம்

”விதிமீறல்களை நிரூபிக்காமல் தண்டிக்க கூடாது” - ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா தீவிர வாதம்

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட்

2013-ம் ஆண்டுக்குப் பின் ஆலையை மூடும் வரை, விதிகளை பின்பற்றவில்லை என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து ஒரு நோட்டீசைக் கூட பெறவில்லை என வேதாந்தா தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விதிமீறல்களை நிரூபிக்காமல் தண்டிக்க கூடாது என ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் அமர்வில் 3-வது நாளாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆலை தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், ‘தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் நியாயமான, பாரபட்சமற்ற அணுகுமுறையைப் பின்பற்றியிருக்கிறார்களா? அல்லது வேறு நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட முன் முடிவை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

எந்தவொரு விதிகளையும் மீறியதாக வேதாந்தா மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும், மாநில அரசின் விதிகளை முழுமையாக பின்பற்றியுள்ளதால், ஆலையை மூடிய உத்தரவு நியாயமற்றது எனவும் குறிப்பிட்டார்.

2013-ம் ஆண்டுக்குப் பின் ஆலையை மூடும் வரை, விதிகளை பின்பற்றவில்லை என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து ஒரு நோட்டீசைக் கூட பெறவில்லை என வேதாந்தா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் தாமிர கழிவு உள்ளிட்ட திடக்கழிவுகள் அபாயகரமானவை அல்ல என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 2018 பிப்ரவரியில் தெரிவித்திருந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தாமிரக் கழிவை அகற்றவில்லை எனக் காரணம் காட்டி ஆலையை மூட உத்தரவிட முடியாது எனவும் வாதிட்டார்.

ஆலையில் ஜிப்சம் கழிவுக்குட்டை நிரம்பி வருவது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எச்சரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஜிப்சம் கழிவுகள் மாசு ஏற்படுத்தாது என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதை சரி செய்ய ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி வழங்காத நிலையில், அதன் மூலம் மாசு ஏற்பட்டாலும் அதற்கு ஆலை பொறுப்பாகாது எனவும் வாதிட்டார்.

விதிமீறல்களை நிரூபிக்காமல் தங்களை தண்டிக்க கூடாது எனவும் ஸ்டெர்லைட் தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், நீதிமன்றத்துக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது எனவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டியே ஆலையை மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்க முடியாது எனவும், அரசியல் எஜமானர்களுக்காக நிலைபாட்டை மாற்றிக் கொள்வது வருத்தமளிப்பதாகவும் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். வாதம் முடிவடையாததால் வழக்கு விசாரணை நாளை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Also watch: கடும் வறட்சியைச் சமாளிக்க செறிவூட்டும் கிணறுகள்! களத்தில் இறங்கிய கிராமத்துப் பெண்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: